மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் குழந்தை… அரச நீல கிரீடத்தை சூட்டி கௌரவிப்பு…!!!!!

பிரதானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து நாட்டில் பிறந்த முதல் குழந்தைக்கு ஜார்ஜியோனிக்கோலஸ் வாக்கர் என பெயரிடப்பட்டிருக்கிறது. பிரத்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரல் கோட்டையில் உயிரிழந்ததை அடுத்து அந்த நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்று கொண்டுள்ளார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அடுத்து அவரது ஆட்சி அதிகாரத்தின் கீழ் ஜார்ஜியோனிக்கோலஸ் பாஸ்கர் என்ற முதல் குழந்தை பல்கலைக்கழகம் மருத்துவமனை கோவெண்டியில் பிறந்திருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த 15 நிமிடங்களுக்கு பின் ஜார்ஜியோ நிக்கோலஸ் வாக்கர் பல்கலைக்கழக மருத்துவமனை கோவெண்டிரியில் பிறந்திருக்கின்றார்.

மருத்துவமனை ஊழியர்களால் சோகத்துடன் பிரித்தானிய மகாராணியின் மறைவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரெபேக்கா ஆலன்(29) மற்றும் ஆடம்வாக்கர்(31) ஆகிய தம்பதியினருக்கு ஜார்ஜியோ நிக்கோலஸ் வாக்கர் என்ற ஆண் குழந்தை கடந்த வியாழக்கிழமை மதியம் 4.44 மணியளவில் பிறந்திருக்கிறது. ராணியின் மறைவு ஒரு பக்கம் இருக்க பிரத்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சி அதிகாரம் பெற்ற பின் நாட்டில் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையும் ஜார்ஜியா நிக்கோலஸ் வாக்கர் பெற்றிருக்கின்றார் கிரேக்கத்தில் ஜார்ஜ் இவை மன்னர் மூன்றாம் சார்லஸ் இன் நடுபெயர்களில் ஒன்றாகும். மேலும் ஜார்ஜியோனிக்கோலஸ் வாக்கர் இரண்டாவது கரோலியன் காலத்தில் அதிகாரப்பூர்வமாக பிறந்த முதல் குழந்தைகளில் ஒன்றாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இது மூன்றாம் சார்லஸ் மன்னரின் ஆட்சியை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் நாங்கள் எங்கள் மகன் பிறந்தது மகிழ்ச்சியாக இருந்தோம் என தெரிவித்துள்ளார். மேலும் ஜார்ஜியோ தற்போது சார்லஸ் மன்னரின் ஆட்சியின் கீழ் பிறந்த குழந்தைகளின் முதன்மையானவர் இதை கௌரவிக்கும் விதமாக எங்களுக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு அணிய விரும்பும் சிறிய அரச நீலகீடத்தை பின்னி தந்திருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.