மூதாட்டியை கொன்று பலாத்காரம் செய்த டிரைவர்…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிபதியின் பரபரப்பு தீர்ப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டனந்தல் காலனி புதுமனை தெருவில் கவிதாஸ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திர ஓட்டுநர். கடந்த 2019-ஆம் ஆண்டு கவிதாஸ் ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அன்று இரவு வேலையை முடித்துவிட்டு கவிதாஸ் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை கவிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

அதற்கு மூதாட்டி உடன்படாததால் கோபமடைந்த கவிதாஸ் பேனா கத்தியால் மூதாட்டியை குத்தி கொலை செய்து பின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் கவிதாசை கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாஸ் இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், 3000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.