மூட்டையை தூக்கிய பெண்….. சட்டென தீண்டிய பாம்பு…. பின் நடந்த சோகம்…!!

பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டு திண்ணையில் இருந்த காய்கறி மூட்டையை வசந்தா தூக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது காய்கறி மூட்டைக்கு அடியில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு வசந்தாவின் காலில் கடித்து விட்டது.

இதனால் மயங்கி விழுந்த வசந்தாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *