மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த மூதாட்டி….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மூதாட்டி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வி.மருதூரில் வசிக்கும் கண்ணம்மாள்(80) என்பவர் வந்துள்ளார். இந்த மூதாட்டியின் மூக்கில் ரத்தம் வடிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ரத்தம் வரும் அளவிற்கு எனது மகன் என்னை பலமாக தாக்கி விட்டார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மூத்தாட்டியை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.