முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்…. அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று  மாலை 5 மணிக்கு கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.