“முள்ளம்பன்றியிடம் வம்பிழுக்கும் சிறுத்தை”… வைரலாகும் சண்டை வீடியோ..!!

சிறுத்தைக்கும் முள்ளம்பன்றி க்கும் இடையே நடந்த தீவிர சண்டை வீடியோ இணையதளங்களில் வைரலாக கொண்டிருக்கிறது.

சிறுத்தை மற்றும் முள்ளம்பன்றிக்கு இடையே ஏற்பட்ட தீவிர சண்டை வீடியோ ஒன்று இணையம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. பறந்து விரிந்த நம் உலகில் ஒவ்வொரு வினாடியும் ஏதாவது ஒரு பகுதியில் விசித்திரமான செயல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அது எத்தகைய செயலாக இருந்தாலும் அவை அனைத்தும் இணையதளம் மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்றன.அந்த நிகழ்வு வாழ்நாளில் நம்மால் மறக்க இயலாத நிகழ்வாக கூட இருக்கலாம்.இந்த நிலையில் ஒரு சிறுத்தைக்கும் ஒரு முள்ளம்பன்றி க்கும் இடையே தீவிர சண்டை நடந்த வீடியோ ஒன்று இணையத்தளம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இது மிகவும் புதிரானது.

இந்திய வன சேவைகளின் ஜெகன் சிங் 25 விநாடிகள் உடைய கிளிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது 2500 பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. கிளிப்பிள், பெரிய சிறுத்தை தனது பாதங்களால் முள்ளம்பன்றியை  தள்ளியதால் சண்டை தொடங்கியுள்ளது.எந்த சூழ்நிலையிலும் முள்ளம்பன்றி தனது தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு தயாராக இல்லை. அதற்கு பதிலாக சிறுத்தை மீது தாக்குதலை மேற்கொண்டது. அந்த சிறுத்தை முள்ளம் பன்றியை கடித்து அதனைக் கீற முயற்சி செய்தது. சிறிது நேரம் போர் தொடர்ந்து நடந்துள்ளது. ஆனால் கிளிப்பிள் நீளம் காரணமாக இறுதி முடிவு என்ன என்று தெரியவில்லை. மேலும் ஜெகன் சிங் பதிவில், “ஒவ்வொரு உயிரினத்திற்கும் சில பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கும். முள்ளம்பன்றியை இங்கே பாருங்கள்” என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *