முளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….!!!!

முளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் டேங்க் ரோடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் படித்து முடித்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் உறவினர் மகளான சாலினியை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சிந்தாமணி அருகே சென்ற போது எதிரே வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பவுன்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விக்னேஸ்வரனின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிய சாலினி மற்றும் பவுன் குமார் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பவன் குமார் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பவுன் குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை தானமாக எடுத்தனர். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பயிற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.