முல்லையாக சித்ராவின் கடைசி நாள் இன்று… ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்த கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பப்படுகிறது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலமாக டிவி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா. அவர் கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் முல்லையை பார்க்க முடியாது என்று ரசிகர்கள் அனைவரும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைசியாக நடித்த எபிசோடு இன்று ஒளிபரப்பப்படுகிறது. நாளை முதல் காவியா என்ற நடிகை முறையாக தோன்ற உள்ளார். அதனால் சித்ராவின் கடைசி எபிசோட் ரசிகர்கள் அனைவரும் தவறாமல் பாருங்கள்.