“முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா”…. கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!!!

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் முறையூர் கிராமத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ள நிலையில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஆனி தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இது பத்து நாட்கள் நடைபெறுகின்ற நிலையில் நேற்று காலை குருக்கள் சுரேஷ் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பூஜையை தொடங்கி வைத்தார்கள். பின் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து இரவு காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கியது. இதை தொடர்ந்து வருகின்ற 8-ம் தேதி நள்ளிரவு கழுவன் திருவிழா நடைபெறும். 10-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். 11-ம் தேதி தேர்திருவிழாவும் 12ஆம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும் மற்றும் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *