முருகனை கும்பிட திருத்தணிக்கு போறேன்… யாரும் தடுக்க முடியாது… எல். முருகன் அதிரடி பேட்டி…!!!

கடவுளைக் கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் நான் திருத்தணிக்கு புறப்பட்டு செல்கிறேன் என்று பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரை முருக பெருமானின் அறுபடை வீடுகள் இருக்கின்றன கரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக வினர் வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டாயம் அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதனால் தமிழக அரசு சார்பாக பாஜகவின் வெற்றி வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதனால் திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வேலி யாத்திரை தொடங்க இருக்கின்ற நிலையில் பாஜக நிர்வாகிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து திருத்தணிக்கு புறப்படுவதற்கு முன்னதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “கடவுள் முருகனை கும்பிடுவது வழிபாட்டு உரிமை. அதனால் நான் திருத்தணிக்கு புறப்பட்டு செல்கிறேன்” என்று அவர் கூறி திருத்தணிக்கு புறப்பட்டுச் சென்றார்.