தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலிசெல்வம். இவர் வயது முகம் மற்றும் உடல் நலக்குறைவினால் நேற்று காலமானார். இவருடைய மறைவுக்உ முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் மனைவி சங்கீதா மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஆகியோர் முரசொலிசெல்வம் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வியின் கணவர் ஆன முரசொலிசெல்வம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முரசொலி நாளிதழை மேம்படுத்த கடுமையாக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.