உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்தவர் ஹசன். இவர் 2018 ஆம் ஆண்டு அனுஜ் என்பவருது தந்தையை தாக்கியுள்ளார். இந்த முன்பகை காரணமாக இவரை பழிவாங்க நினைத்த அனுஜ் தனது உறவினரான நித்தின் என்பவருடன் சேர்ந்து ஹஷனை கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் ஹசனை மோட்டர் சைக்கிளில் கயிற்றில் கட்டி சாலையில் இருவரும் இழுத்துச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.