முன்விரோதத்தால் செய்த செயல்… வாலிபர் பரபரப்பு புகார்… 3 பேருக்கு வலைவீச்சு..!!

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருஞானசம்பந்தம் (38) என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வரும் சாகுல்அமீது என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தென்பாதியில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 25-ஆம் தேதி திருஞானசம்பந்தம் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு டீ குடிக்க சென்ற அவரை சாகுல் அமீது, அவருடைய தந்தை அப்துல்லா, சகோதரர் மன்சூர்அலி ஆகிய 3 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் திருஞானசம்பந்தர் பலத்த காயம் அடைந்தார். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருஞானசம்பந்தம் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.