முன்மாதிரி கிராமமாக மாற்றுவேன்…. பெண் இன்ஜினியர் வெற்றி…. பொதுமக்கள் நெகிழ்ச்சி…!!

பெண் இன்ஜினியர் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன் என்பவரது மகளான சாரதா என்ற பெண் போட்டியிட்டுள்ளார். இவர் இன்ஜினியராக இருக்கிறார். இந்நிலையில் எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று சாரதா பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சாரதா கூறும்போது, தன்னை வெற்றி பெற செய்த மக்களுக்கும், பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசின் திட்டங்கள் எங்கள் பகுதிக்கு கிடைக்கவும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முயற்சி செய்வேன். மேலும் சுகாதார முன்மாதிரி கிராமமாக வெங்கடாம்பட்டியை மாற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *