முன்பகையால் ஏற்பட்ட விளைவு….. 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை….!!

முன்பகை காரணமாக 2 பெண்களை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ஞானவரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவரத்தின் மனைவி சோலையம்மாள் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த பாலமுருகன் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் தன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சோலையம்மாளை வெட்டியுள்ளார். இதனைதொடர்ந்து சோலையம்மாள் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற குப்பம்மாள் என்ற மூதாட்டியையும் அரிவாளால் வெட்டி விட்டு பாலமுருகன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கமுதி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாலமுருகனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *