முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு புற்றுநோய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பஞ்சாப் காங்கிரஸ் முன்னால் தலைவரும் இந்திய கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் தனது கணவரை தொட்டு உணர்ச்சிவசப்பட்ட பதிவை பதிவிட்டுள்ளார்.

நீ செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறாய், உங்களை சிறையில் செல்ல காரணமானவர்களை மன்னியுங்கள், ஒவ்வொரு நாளும் உனக்காக காத்திருக்கிறேன், எனக்கு ஸ்டேஜ் 2 புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இனி உங்களுக்காக என்னால் காத்திருக்க முடியாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். நவ்சோத் சித்துகடந்த 1988 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.