திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப். 60 வயதான இவர் மதுபான பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு யாகப்பன்பட்டியில் உள்ள பார் அருகே மர்ம நர்களால் மாயாண்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அதிமுக ஆட்சியில் அந்த கட்சி பொறுப்பில் பதவி வகித்து வந்த மாயாண்டி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவில் இணைந்தார். மணல், மதுபான விற்பனை உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார். தொழில் போட்டி காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.