இதை செய்தால் போதும்…. ரூ.10,000 இலவச கிப்ட் வவுச்சர் பெறலாம்…. அட்டகாசமான ஆபர்…!!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்வது அமேசான் நிறுவனம். அமேசான் மூலமாக தற்போது மக்கள் அதிகமாக வீட்டில் இருந்தபடியே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது  தள்ளுபடியையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அட்டகாசமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கிப்ட் வவுச்சர்கள் இலவசமாகவே வழங்குகிறது.

இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் என்ற இணையதளத்தில் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தால் மட்டுமே போதும். இதை பெற ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் கடன் வழங்கப்பட்டால் சம்பந்தபட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த கிப்ட் வவுச்சர் கிடைக்கும். இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு கண்டிஷன்கள் உள்ளன. அதில் ஒன்று கடந்த ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதிக்குள் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் கடன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

50 லட்சம் வரையிலான கடன்களுக்கு ரூ.5000 கிப்ட் வவுச்சர், அதற்கு மேலான கடன்களுக்கு ரூ.10,000 கிப்ட் வவுச்சர் கிடைக்கும். எனவே வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமேசான் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *