முதியவர் செய்யுற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக்நகர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் முருகன் (67) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமிக்கு முருகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, முருகனுக்கு 20 ஆண்டுகள்  ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.