முதல் முறையாக வில்லியாக களமிறங்கும் பிரபல நடிகை….. வெளியான தகவல்…..!!!!!

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோன்று கதாநாயகிகளும் வில்லியாக மாறி வருகின்றனர். ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், ரீமா சென் ஆகியோர் எதிர்மறை வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சோனியா அகர்வாலும் வில்லியாக நடிக்க வந்திருக்கிறார்.

இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்கள் பலருடன் நடித்திருக்கிறார். இப்போது ஏ.ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் “உன்னால் என்னால்” எனும் திரைப்படத்தில் வில்லியாக நடிக்கிறார் சோனியா அகர்வால். இது இவர் வில்லியாக நடிக்கக்கூடிய முதல் படம்.

Leave a Reply