பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . விஷ்ணு விஷால் தனக்கென்ற பாணியில் மிக வித்தியாசமான கதை களத்தில் நாயகனாக களம் இறங்கக் கூடியவர். கடந்த 2018 ஆம் வருடம் தன்னுடைய மனைவி ரஜினியை விவாகரத்து செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்ற ஒரு மகன் இருக்கிறார். அதிலிருந்து மீண்டு வந்த இவர் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவை 2021 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.

இருந்தாலும் தந்தைக்கான கடனை மகனுக்கு செய்து கொண்டே இருந்தார். இந்த நிலையில் பேட்டி அளித்த இவர், தன்னுடைய முதல் மனைவி பிரிந்தது குறித்து பேசி உள்ளார். அதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை .இனிமேல் தனியாகத்தான் இருக்கப் போகிறோம் என்ற முடிவை எடுத்து விட்டேன். என்னிடம் விவகாரத்தை கேட்டது அவர்தான். நீதிமன்றத்தில் கேட்டபோது கூட நான் அமைதியாக தான் இருந்தேன்.

மேலும் ஜுவாலா என்னுடன் பழகியபோதே நான் கூறினேன். என்னுடன் ஏன் பழகுகிறாய் எனக்கு ஒரு மகன் இருக்கிறார். நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லும்போது என்னை பிடித்திருக்கிறது என்று கூறினார். அவர் பாசிட்டிவான நபர்.  அப்போதுதான் யோசித்தேன் பிரச்சனைகளை காரணம் காட்டி மற்றவர்களை ஆசையை ஏன் புறக்கணிக்க வேண்டும். சில நாட்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். அவரும் விவகாரத்தான பெண் தான் என்று கூறினார்.