முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற டைம்ல இப்படி செய்திருக்காங்க?…. ஆர்.எஸ் பாரதி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு மின்சார மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராகவுள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து திமுக தொண்டர்கள் பலர் சோனை நடத்தப்படும் இடங்களில் குவிந்தனர். தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஐடி ரெய்டு தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது “வருமான வரித் துறையினரின் சோதனைக்கு மாநில காவல்துறையை அழைத்து செல்வது தான் வழக்கம்.

எனினும் திட்டமிட்டு மாநில காவல்துறையை அழைத்து போகாமல் செல்கின்றனர். இதன் வாயிலாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எங்கள் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் அதுபற்றி பத்திரிக்கையில் தினசரி செய்தி வருவதை திசை திருப்பும் நோக்கில் நேற்று ரெய்டு நடத்தி உள்ளனர்” என்று ஆர்.எஸ் பாரதி கூறினார்.

Leave a Reply