முதல்வர் ஸ்டாலின் மகனுக்கு எதிரான வழக்கு ரத்து…. பின்னணி என்ன?…. நீதிமன்றம் உத்தரவு……!!!!!

சென்ற வருடம் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி  தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்டு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியடைந்தார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்து இருந்தார். இதனிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் மீதான வழக்குகள் பற்றி தவறான தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும், அதற்கு தெரிவித்த ஆட்சேபங்களை அரசு ஏற்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆகவே உதயநிதி வேட்புமனு ஏற்றதை செல்லாது என்றும் அதன் வாயிலாக போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இவ்வாறு பிரேமலதா தொடர்ந்த இவ்வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தனது மீதான வழக்கு விபரங்களை மறைக்கவில்லை எனவும் அதனால் தான் வேட்புமனு மீதான ஆட்சேபங்களை ஏற்காத தேர்தல் ஆணையம் தன் வேட்பு மனுவை ஏற்று போட்டியிட அனுமதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆகவே பிரேமலதா தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார்.

இவ்வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி பாரதிதாசன், தனக்கு எதிரான வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத சூழ்நிலையிலும், நீதிமன்ற விசாரணைக்கு வராத நிலையிலும் 22 வழக்குகள் தொடர்பான விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். எனவே தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என கூறி உதயநிதியின் மனுவை ஏற்று அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *