அமித்ஷா தமிழக மண்ணிற்கு வர ஆரம்பித்துவிட்டார் என தெரிந்த உடன் முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்றில் இருந்து காய்ச்சல் வர ஆரம்பித்து விட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வேளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது வேலூரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “அமித்ஷா வரும் போது லைட்டை வேண்டுமானால் அணைக்கலாம், ஆனால் தொண்டர்களின் உற்சாகத்தை எப்போதும் அணைக்க முடியாது. அமித்ஷா தமிழக மண்ணிற்கு வர ஆரம்பித்துவிட்டார் என தெரிந்த உடன் முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்றில் இருந்து காய்ச்சல் வர ஆரம்பித்து விட்டது ” என சாடினார்.