முதல்வர் ஆசையில் போஸ்டர் ஓட்டினாரு… கொளுத்தி போட்ட ஜெயக்குமார்….  அம்மா என்ன செஞ்சாங்க தெரியுமா ?

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, ஜெயக்குமார் சொன்னதை பார்த்தேன். துரோகம் துரோகி என்கிறார்.  ஒரு சபாநாயகர் தமிழக வரலாற்றில் இந்தியாவிலேயே அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். சபாநாயகரை ராஜினாமா பண்ணுனு சொன்னது. சொன்னவுடனே ராஜினாமா பண்ணது. இந்த துரோகியா தான் இருக்க முடியும். அம்மா ”முதலமைச்சர் ஜெயக்குமார்” என போஸ்டர் ஓட்டியதை பார்த்த உடனே ஃபர்ஸ்ட் லிஸ்ட்ல பேரு இல்லை.

மினிஸ்டராக இல்ல அவரு. நானும் தலைமை செயலகத்தில் இருந்தேன். சிஎம்ஆக அம்மா வெளியில வராங்க. இவரு கேக்குறாரு…  அம்மா லிஸ்ட்ல பெயர் விட்டுடுச்சு, அப்படின்னு கேக்குறாரு. அப்போ நான் பார்த்துக்கிறேன் ஜெயக்குமார்,  எனக்கு தெரியும் போங்க என்கிறார்கள். அப்புறம் இவரை சபாநாயகராக நியமிக்குறாங்க. அதுக்கு பின்னாடி இவருக்கு முதல்வர் ஆசை வந்து, அப்பவே முதலமைச்சருக்கு பிளான் பண்ணி,  ( நான் யாரு பேருன்னு சொல்ல விரும்பல ?)  அவருடைய பேச்சைக் கேட்டு, இவர் உட்கார்ந்து ஒரு ஆய்வு எல்லாம் பண்ணி,  போஸ்டர் எல்லாம் ஓட்டுன பின்னாடி தான் இவர் துரோகி என முத்திரை குத்தி,  சபாநாயகர்ல இருந்து அம்மா எடுக்க சொன்னாங்க.

இது இந்த துரோகம் வெளியே பேசலாமா ? நான் சொல்வது உண்மைதானே ஜெயக்குமாருக்கு…  நீங்க என்ன துரோகத்தை பத்தி பேசுறது?  யாரை துரோகி என்று பேசுறது? நீ கொளுத்தி போட்டு இவ்வளவு வேலையும் நீ தான் பாத்துட்டு இருக்க. துரோகி என்று பேசுறதுக்கு எல்லாம் புறா தலைவனுக்கு எனக்கு எந்த விதத்திலும் அதிகாரம் கிடையாது. ஆகவே அதையெல்லாம் நீ பேசக்கூடாது. பொறம்போக்கு பொறம்போக்கு வேலையைத்தான் பார்க்கணுமே தவிர இந்த வேலையை பார்க்க கூடாது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *