முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

மூங்கில் துறை பட்டு  அருகே உள்ள வடகீரனூர் கிராமத்தில் அம்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு முதல்வரின் மானாவரி  மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கியுள்ளார். அந்த மாவட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மதிசுதா முன்னிலை வகித்துள்ளார். இந்த நிலையில் முகாமில் முதலமைச்சரின் மாநாடு மேம்பாட்டு திட்டம் பற்றி விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடுகள், மண் மாதிரி சேகரிப்பின் அவசியம், இயற்கை விவசாயம், ஊடுபயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், உழவன் செயலி பயன்பாடுகள், ஆத்மா திட்ட பணிகள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் போன்றவை பற்றி விரிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் உதவி தொழில்நுட்பம் மேலாளர் மேரி ஆனந்தி, பயிர் மதிப்பீட்டு ஆய்வு பணியாளர்கள் வல்லரசு ஏழுமலை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் அலுவலர் வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *