“முதல்வரின் தாயை இழுவுபடுத்தும் திமுக”… கடுமையாக சாடிய மோடி…!!

“முதலமைச்சரின் தாயை இழிவுபடுத்தும் திமுகவினர் நாளை ஆட்சிக்கு வந்தால் பல பெண்களை இழிவுபடுத்துவார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

கோவை தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த பிரதமர் மோடி வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷத்துடன் தனது உரையைத் தொடங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இந்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது. அவர்களுக்கு குடும்பம் தான் முக்கியம் என்றார்.

மேலும் பெண்களை அவமானப்படுத்துவது காங்கிரஸ் மற்றும் திமுகவின் கலாச்சாரம் என்று விமர்சித்தார். பெண்கள் குறித்து லியோனி மற்றும் ராசா இழிவாக பேசியதை திமுக கண்டிக்கவில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார். பெண்களை அவதூராக பேசுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

திமுகவின் இளைய வாரிசு தலைவர், அக்கட்சியின் மூத்த தலைவர்களை ஓரம்கட்டியுள்ளார் என்றும் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார். முதலமைச்சரின் தாயை இழிவுபடுத்தும் திமுகவினர் நாளை ஆட்சிக்கு வந்தால் பல பெண்களை இழிவுபடுத்துவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.மேலும் மக்களான உங்களுக்கு சேவை செய்ய காத்துகொண்டு இருக்கிறோம். எங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பை வழங்க உங்களது வாக்குகளை தாருங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.