பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 4க்கு அருகே இரண்டு குரங்குகள் வாழைப்பழத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தது. ஒரு குரங்கு மற்றொரு குரங்கின் மீது ரப்பர் பொருளை தூக்கி வீசியது. அந்த பொருள் மின்சார மேல்நிலை கம்பியின் மீது பட்டது. இதனால் கம்பி அறுந்து விழுந்து கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அறிந்த மின்சாரத் துறையினர் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அதனை சரி செய்தனர். இதனால் பீகார் சம்பர்க் கிராந்தி ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. மற்ற ரயில்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.