நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய் தன் கட்சி கொள்கைகளை அறிவித்த நிலையில் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக அவரது கட்சி கொள்கைகளை கூமுட்டை என்றும் லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என்றும் மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார். இதற்கு தற்போது விஜயலட்சுமி பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது சீமான் தன்னை சீரழித்து விட்டதாக கூறும் விஜயலட்சுமி தற்போது சீமானை சரமாரியாக விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, என்ன மிஸ்டர் சீமான் நீங்க சாபம் விடுறீங்க. விஜய் அண்ணாவை லாரி மோதி செத்துப் போவாருன்னு சொல்றீங்க.

அவர் அப்படி சொல்றதுக்கு நீங்க என்ன உத்தமரா. பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை. முதல்ல உங்க கட்சியில இருக்கிற ஓட்டையை அடைங்க. அங்க நிறைய ஓட்டை இருக்கிறது. உங்க கட்சியில் ஊழல்கள் அதிகமாக இருக்கிறது. அண்ணன் விஜய் ஆக இருக்கட்டும் திமுகவாக இருக்கட்டும். கொள்கை ரீதியாக தவறு செய்ததா? நீங்க கூறுகிறீர்கள். அப்படி தவறு செஞ்சவங்க லாரியில் அடிப்பட்டு செத்துப் போகணும்னா எங்கள மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு நடுரோட்டில் விட்டு நீங்க எது அடிச்சு சாகணும். மேலும் திமுகவுக்கும் விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ண வேண்டும் என்பது நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்