உத்திரபிரதேசம் மாநிலத்தின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் வாஸிம் ரிஸ்வி. இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். பின்னர் தன்னுடைய பெயரை ஜிரேந்திர நாராயண தியாகி என பெயர் சூட்டிக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது இவர் ஜாதி மாறிவிட்டதாக அறிவித்துள்ளார். அதாவது பிராமண ஜாதிக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார். அதோடு தன்னுடைய பெயரை தாக்கூர் ஜிதேந்திர நாராயணன் சிங் என்று மாற்றியுள்ளாராம். மேலும் இவருடைய பிராமண நண்பர் ஒருவர் அவரை மகனாக தத்தெடுத்துக் கொண்டதால் அவரும் பிராமண மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.