உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் காதலின் நினைவுச்சின்னமாக பார்க்கப்படுகிறது. இதனை ஷாஜகான் மும்தாஜுக்காக கட்டினார். ஆனால் தாஜ்மஹால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் இதனை இந்து மன்னர்கள் கட்டினார்கள் என்றும் பல காலங்களாக இந்துத்துவா அமைப்புகள் கூறி வருகிறது.
அதோடு முன்னதாக இது தேஜா மஹால் என்று அழைக்கப்பட்டதாகவும் முகலாய ஆட்சிக்காலத்தில் அது தாஜ்மஹால் என்று மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதற்கிடையில் சமீபத்தில் ஒரு பெண் கான்வார் சுமந்து கொண்டு தாஜ்மஹாலுக்குள் நுழைய முயன்றார். இதேபோன்று தாஜ்மஹாலுக்குள் சுற்றுலா பயணிகள் போல் நுழைந்த இருவர் அங்கு ஓம் ஸ்டிக்கர்களை ஒட்டியதோடு கங்கை நீரை மும்தாஜ் ஷாஜகான் கல்லறையில் தெளித்தனர்.
இது தொடர்பான வீடியோ கூட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்கள் இந்து மகாசபை அமைப்பை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இதேபோன்று இந்து மகாசபையை சேர்ந்த மீரா ரத்தோர் என்ற பெண் தாஜ் மகாலுக்குள் சுற்றுலா பயணி போல் சென்றார். பின்னர் அவர் கங்கை நீரை தெளித்ததோடு காவி கொடியை ஏற்றி வழிபட்டுள்ளார். இவரை மத்திய தொழிற்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
आगरा- ताजमहल पर फिर चढ़ाया गया जल, सावन के सोमवार को एक महिला ने ताजमहल के मुख्य गुंबद पर चढ़ाया जल और लहराया भगवा झंडा
सोशल मीडिया पर वायरल हुआ वीडियो#Sawan2024 #TajMahal #AgraNews pic.twitter.com/VFNppf0kRe
— Pravin Kumar Yadav (@PravinNews) August 5, 2024