“முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி” கலைஞர் சிலையை திறக்கிறார் மம்தா பானர்ஜி !!..

கலைஞர்க்கு   நாளை முதலாம்  ஆண்டு  நினைவு  அஞ்சலி  செலுத்தி கலைஞர்  சிலையை  மேற்கு  வங்க  முதல்வர்  மம்தா  பானர்ஜி  திறந்து வைக்க  உள்ளார்.

கலைஞரின்  முதலாம்  ஆண்டு  நினைவு  தினம்  நாளை (ஆகஸ்ட் -7) அனுசரிக்கப்படுகிறது . கலைஞர் மறைவு  எய்தி  நாளையுடன்  ஓராண்டு  ஆகிறது . இந்நிலையில்அண்ணாசாலையில்  உள்ள  அண்ணா சிலை  அருகில் நாளை காலை 8 மணிக்கு  முக ஸ்டாலின்  தலைமையில் அமைதி  பேரணி  நடை  பெற  உள்ளது . ஊர்வலத்தின்  நிறைவாக  மெரீனாவில்  உள்ள  கலைஞர் நினைவகத்தில் திமுகவினர் அஞ்சலி  செலுத்தவுள்ளனர் .

மாலை  5 மணிக்கு  திமுக  நாளேடான  முரசொலி   அலுவலகத்தில் கலைஞர்   அமர்ந்த  நிலையில் எழுத்து  ஓவியம்  தீட்டுவது  போன்ற  சிலை திறக்கப்படவுள்ளது .சிலையை  மேற்கு  வங்க  முதல்வர்  மம்தா பனர்ஜி  திறந்து  வைக்கிறார் .இதனை  தொடர்ந்து  மாலை  6 மணியளவில்  கலைஞர்  உருவ  சிலை  திறப்புவிழா  பொதுக்கூட்டம்  ராயப்பேட்டை ஓய் எம்சிஏ  திடலில் நடைபெற  உள்ளது. வீரமணி  தலைமையில்  நடைபெற  உள்ள  பொதுக்கூட்டத்தில்  மேற்கு  வங்க  முதலமைச்சர்  மம்தா  பானர்ஜி, காஷ்மீர் முன்னாள்  முதல்வர்  பரூக்  அப்துல்லா , புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி  மற்றும்  கவிஞர்  வைரமுத்து  உள்ளிட்டோர்  பேசுகின்றனர் . திமுக  தலைவர்  முக ஸ்டாலின்  நன்றி தெரிவித்து  பேசுகிறார் .