முதலமைச்சர் நிவாரண நிதிக்கு…. திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர்.

அந்தவகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளவர்கள் தாராளமாக உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே பலரும் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *