கடந்த 25-ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்று கொண்டவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். இவர் தன்னுடைய இயற்பெயரை 16-ம் பெனடிக் என மாற்றிக் கொண்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த இவர் வயது முதிர்வு மற்றும் உடல் நல பிரச்சனை போன்ற காரணங்களால் தன்னுடைய பதவியை துறந்தார். இந்நிலையில் முன்னாள் போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக வாடிகன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.