தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக செங்கல்பட்டு முட்டுக்காடு படகு குளம் வளாகத்தில்  ஐந்து கோடி ரூபாய்  மதிப்பீட்டில்  125 அடி நீளம் 25 அடி அகலத்தில் பிரம்மாண்ட இரண்டடுக்கு  மிதக்கும் உணவாக கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இதனுடைய கட்டுப்பாடு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முட்டுக்காடு சுற்றுலா படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் விதமாக மிதவை படகுகள், வேகமாக இயந்திர  படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய மிதக்கும் உணவக கப்பலின் முதல் தளம்  அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.