முடிவுக்கு வந்துவிட்டதா ஜோ பைடன் போட்ட திடீர் உத்தரவு!

துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று மாணவர்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சிறு வணிக நிர்வாக மகளிர் வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி சூடு வன்முறையை தடுக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் சரியானது அல்ல என்றும் ஆயுத தாக்குதல் தடையை நிறைவேற்ற மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் எனவும் அவர் கூறினார். அரசு இன்னும் சில முன்னேற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது எனவும் அவர் தெரிவித்தார்.