முக்கியமான 3 பேர் ஒரே நாளில் அதிர்ச்சி மரணம்… சோகம்…!!!

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது வரை போராட்ட களத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் போராட்டக் களத்தில் இன்று ஒரே நாளில் 3 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரேந்தர் சிங்(39) என்பவர் சிந்து எல்லையில் மாரடைப்பால் உயிரிழந்தார். தர்சன் சிங் (71) என்பவர் நேற்று இரவு உணவு சாப்பிட்டு தூங்கிய நிலையில் இன்று காலையில் எழ வில்லை.

மருத்துவர் சோதித்து பார்த்தபோது மரணம் அடைந்திருந்தார். பிஜேந்திரா(57) என்பவர் போராட்டத்தின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஒரே நாளில் 3 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.