பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிலையில் அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் திருமணத்திற்கு பிறகு ஹாலிவுட் சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தி பிளப் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் தனக்கு முகம் மற்றும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.