பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000 ம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்ற நிலையில் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தொடர்ந்து அங்கு நடித்து வந்த பிரியங்கா சோப்ரா முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோனாசை என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் குடியேறிய பிரியங்கா சோப்ரா தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது “தி பிளப்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிராங்க் ஈ பிளவர்ஸ் இயக்குகிறார்.

தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா “தி பிளப்” படத்தின் சண்டைக் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் நடிகை பிரியங்கா சோப்ரா ரத்த காயத்துடன் இருப்பதுபோல் இருந்தது. இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)