மீன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மீன்பிடிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட அரபி கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலம் ஜூன் 1 முதல்  தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து ஆழ்கடலில் தங்கி இருந்து மீன் பிடித்து வரும் மீனவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் துறைமுகங்களில் விசைப்படகுகளை சம்பந்தப்பட்ட மீன் பிடி துறைமுகங்களில் ஒதுக்கி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வரும் 31-ஆம் தேதிக்குள் கரைக்கு வந்து சேராத விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply