மீனம் ராசிக்கு…தொட்டக் காரியம் வெற்றியாகும்…வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று கனவுகள் நனவாகும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொட்ட காரியம் வெற்றியை கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். நண்பர்களுடன் சுமுகமாக செல்வது ரொம்ப நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

வியாபாரமும் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும், லாபம் ஓர் அளவு குறையாமலிருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது காலதாமதமாக தான் வந்து சேரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். செயல்திறன் இன்று ஓரளவு கூடும். எந்த காரியத்தையும் திறமையுடனும் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேருவார்கள். இன்று தாய் தந்தையரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அவர்களுடைய உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்.

உங்களுடைய உடல் நிலையும் கவனமாகவே பார்த்துக்கொள்ளுங்கள். எப்பொழுதும் போலவே சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வதும், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது தான் ரொம்ப நல்லது. இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிங்க் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் வெள்ளை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *