மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… புதிதாக உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை என மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சிறிது, சிறிதாக பரவி தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.

நேற்று மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, வெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் 23 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.