பிரபல இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான தனிக்காட்டு ராஜா. இந்த திரைப்படம் தமிழகமெங்கும் சில முக்கிய திரையரங்குகளில் மட்டும் ரீ மேக் செய்து டிஜிட்டல் முறையில் வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி, சில்க் சிமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த இந்த படம் அந்த காலகட்டத்திலேயே வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து புதிய படம் வெளியானது போல் கொண்டாடி வருகின்றார்கள்.