தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்திற்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவனின் கதை திருப்திகரமானதாக இல்லாததால் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டு தற்போது மகிழ் திருமேனியை புது இயக்குனராக கமிட் செய்துள்ளனர்.
இந்த படத்தின் பூஜை அண்மையில் அஜித் அலுவலகத்தில் வைத்து நடந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தலைப்புடன் ஏகே 62 பட அறிவிப்பை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்திற்கு டெவில் உள்ளிட்ட 3 ஆங்கில தலைப்புகளை இயக்குனர் மகிழ் திருமேனி தேர்வு செய்துள்ளதாகவும், விரைவில் படத்தின் சூட்டிங் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயின் லியோ படம் அக்டோபர் 19-ஆம் தேதி ஆயுத பூஜை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால் அதே நாளில் ஏகே 62 திரைப்படத்தையும் வெளியிட வேண்டும் என அஜித் மகிழ்திருமேனிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இதனால் கூடிய விரைவில் படத்தின் சூட்டிங் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.