மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை…!!!

கொரோனா பரவலின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தற்போது வரை வைரஸ் தொற்று நீங்காமல் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பில் மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா , தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் கேபினட் செயலர், முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் அதிகம் பாதிப்புள்ள மாநிலங்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.