ஜூலை 1ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற இந்த செய்தி தவறானது என்று தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள உண்மை கண்டறியும் குழு,  ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்வு  என்ற தகவல் வதந்தி.

2022 ஆம் வருடம் ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. யாரும் நம்ப வேண்டாம். மீண்டும் மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கும் பழைய செய்தி என்று குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.