மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரித்விராஜ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரித்விராஜ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் நடிகராவதற்கு முன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து இவர் ‘லூசிபர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்‌. மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பிரித்விராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ப்ரோ டாடி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க இருக்கிறார் . விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *