மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விக்ரம்…விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கின்ற திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வம் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்  இயக்கத்தில் விக்ரம் சியான் 61 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த படங்களை தொடர்ந்து கோப்ரா படத்தில் இயக்குனர் அஜய்  ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மீண்டும் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அண்மையில் ட்விட்டர்  ஸ்பேசில் கோப்ரா படக்குழுவினருடன்  உரையாடிய விக்ரம் மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கின்றேன் என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது பற்றி அதிகாரப்பூர்வ  அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *