இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேச மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகளை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுக்க அரசு ஊழியர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் ஒரு அரசு ஊழியர் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யவில்லை என்றால் அவர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார். அது மட்டுமல்லாமல் ஊழியர் புதிய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்தால் தனது பங்கை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.