
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் பகத் பாஸில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான முறையில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவார்.
இந்நிலையில் தற்போது அவர் மாரிசன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுதீஷ் சங்கர் இயக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில் வருகிற 25-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இந்த தகவலை தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்ட அறிவித்துள்ளது. மேலும் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கும் மாரிசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.